Bloodmoon (Tamil Dubbed) | Full Movie | Gary Daniels | Darren Shahlavi | IOF Tamil
Contact us to Add Your Business
Bloodmoon (Tamil Dubbed), An expert on serial killers comes out of retirement to find the masked murderer of several star athletes.
Director: Siu-Hung Leung
Writer: Keith W. Strandberg
Stars: Gary Daniels, Darren Shahlavi, Chuck Jeffreys
Gary Daniels, Darren Shahlavi, Full Movie, Bloodmoon, Tamil Dubbed
Fantastic fight movie
Dubbing voice nalla illa
Good movie
Super movie
அன்புள்ள சகோதர-சகோதரிகளே,
என்னோட channelஐ நேரம் இருக்கும் போது பாருங்க…உங்களுக்கு பிடிச்சிருந்துச்சுனா மட்டும் எனக்கு support பண்ணுங்க..இப்டி comment sectionல போடுறேனு தப்பா நினைக்காதீங்கா..
Thank you so much for your support brothers and sisters.
நன்றி
Yarum thappa ninaikka mattargal velipadaya iruppathu romba nallathu super bro
Bro plz uploas police story 4th part tamil dub plz
“ப்ளட் மூன்”படம் பற்றிய ஒரு சிறப்பு பார்வை!
படத்தில், அடுத்தடுத்துப் பல கொலைகள், கொடூரமான முறையில், சங்கிலி தொடராய் நிகழ்வதும், இதை நிகழ்த்துகிற கொலைகாரன், காவல்துறை (போலீஸ்) கையில் சிக்கினானா!? என்பதை, தொடக்கம் முதல் இறுதிவரை, வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு எனப் படம், பஞ்சில் பற்றிக்கொண்ட நெருப்பெனப் பரவி, ரசிகர்கள் நெஞ்சில் கொழுந்துவிட்டெரியும் நெருப்பென அனலாய் எரிகிறது! நெருப்பு அணைந்ததா? ரசிகர் நெஞ்சம் குளிர்ந்ததா? என்பதை கதை, திரைக்கதை, வசனம், சண்டைக் காட்சிகள் வழியாக அருமையாக இயக்குநர் வெளிப்படுத்தி, வெற்றிகரமான ஒரு படத்தை, பிரம்மாண்டமாக தந்திருக்கிறார்! பலே! பலே!
‘ரத்த(கறை படிந்த)நிலவு’ காட்சிக் குறியீடு வழியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வில்லன், தன் வித்தியாசமான பாணியில், கொடூரக் கொலைகளை அரங்கேற்றுகிற ஒவ்வொரு முறையும், தான் கற்ற தற்காப்புக்கலை யுக்திகளுடன், தான் கண்டறிந்த கூடுதலான சில புது முறைகளை உபயோகித்து, எதிரிகள் எப்போதும் தன்னை வீழ்த்தமுடியாத வண்ணம், அதிரடி சாகசம் செய்து, அவர்களை அடித்து வீழ்த்தும் அத்தனை தடவையும், ரத்தம் உறைய வைக்கும் நொடிகளாக, இருதயம் ‘தடதட’வென துடிப்பது, அவனால் கொல்லப்படுகிறவர்களுக்கு மட்டுமல்ல! கொலைகளைக் காணும் நமக்கும்தான்!
சகட்டுமேனிக்கு சண்டைப் படங்களை வெறித்தனமாக ரசிப்பவர்களுக்கு, இப்படம் கூடுதலாகவே குதூகலமூட்டும்! கொண்டாட வைக்கும்!
காரணம், படத்தின் இயக்குநரே, பார்த்துப் பார்த்து, வித்தியாசமாகவும், புதுமையாகவும், புல்லரிக்கச் செய்யும் அளவுக்கு, சண்டைக்காட்சிகளை மயிர்க்கூச்செரியும் வண்ணம் அதிரடியாய் வைத்து, இடி இடியென இறங்கும்படி, நாடிநரம்புகள் துடிக்க, எலும்புகள் மொத்தமும் நொறுங்கும்படி, முறையான தற்காப்புக்கலையை, பலமாக நம்பும்படி அமைத்து பரபரப்பை தந்திருக்கிறார் என்பதுதான் அது!
சண்டை படங்களை இயக்க விரும்புபவர்களுக்கு, இப்படம் நல்ல பாடம்! திரைப்பட திரட்டுக்களில்(கலெக்சன்ஸ்) தற்காப்புக் கலை பற்றிய படங்களின் வரிசையில் வைக்கப்பட வேண்டிய படங்களில் நிச்சயம் இது இடம்பெறும் அளவுக்கு இதன் தரம் நிரந்தரம்! வாழ்த்துக்கள்!
உண்மையில் படத்தில், ‘வெற்றிவீரன்’ யார் என்ற கேள்விக்கு, வில்லன், நாயகன் இருவருக்குமிடையேயான போட்டியில், இறுதியில் வென்றது யார்!? என்பதைப் படம் பார்த்து, ரசித்து தெரிந்துகொள்ளுங்கள்!
மனைவி மற்றும் மகளுடன் நாயகன், அவனுடன் நண்பனாக நெருக்கமாகும் சக காவல்துறை அதிகாரி, நாயகி மற்றும் அவள் தந்தை, வில்லன் மற்றும் அவனுடன் சண்டையிட்டு மரணமடையும் நபர்கள் என படத்தில் இடம்பெற்ற ஒவ்வொருவரின் பங்கும் படத்தின் வெற்றிக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது!
சண்டைப்பட பிரியர்கள் கண்டிப்பாகப் பார்த்து ரசிக்கவேண்டிய படம் இது!
நேர்க்கோட்டில் தீவிரமாக(சீரியஸ்ஸாக) பயணிக்கும் திகில் காட்சிகளுக்கு, படபடக்கும் இதயத்துடிப்பை தணிப்பதற்கு, நாயகன், நாயகி, நாயகனின் நண்பன், அவன் மேலதிகாரி என இவர்கள் அடிக்கும் நகைச்சுவை கலாட்டாக்கள் நல்ல விருந்தாக, நோய்க்கு மருந்தாக உதவுகின்றன!
மொழிமாற்றத்தில் நல்ல தரம் இருப்பினும், அவை கதாபாத்திரங்களின் வாயசைப்புக்கு ஏற்ற விதத்தில், குரலமைப்பை பொருத்தமாய் அமைக்காததால், ரசிப்பின் சுவை சில இடங்களில் சற்று குறைகிறது என்கின்ற குறையைத் தவிர படம் நல்ல தரம்!
4☆/5☆ மதிப்பெண்கள் தாராளமாக தரலாம்!
நல்ல படத்தை சிறப்பாகத் தரவேற்றம் செய்த வலைக்குழுவுக்கு வாழ்த்துக்கள்! – நன்றி! வாழ்க!! வளர்க!!!”